வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் நேற்று மதியம் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய இரு இளைஞர்களை ஈச்சங்குளம் பொலிசார் சந்தேகத்தில் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் நேற்று மதியம் வீட்டிலுள்ளவர்கள் மாடு மேய்ப்பதற்காக மாடுகளை சாய்த்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து திருடச் சென்றவர்கள் அங்கிருந்து 18பவுண் நகையும் 33ஆயிரம் ரூபா பணத்தையும் திருடி சென்றுவிட்டதாக  உரிமையாளரினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது, ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த 20வயதுடைய இரு இளைஞர்களையும் இன்று கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.