ரயில்களில் யாசகம் பெற்று வந்த 65 வயதுடைய கண் பார்வையற்ற வயோதிபப் பெண் ஒருவருக்குச் சொந்தமாக 3 வீடுகள் இருப்பதும், அவரது வங்கிக் கணக்கில்  500 ஆயிரம் ரூபாய் பணமும் வைத்திருந்தமையையடுத்து குறித்த  ரயில்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Image result for யாசகம்

கம்பஹா நகரில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த குறித்த வயோதிபப் பெண் அதன் மூலம் கிடைத்த பணத்தில் குறித்த 3 வீடுகளையும் கட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு வரதட்சணையாக வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விதவைப் பெண்ணான அவர் கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களுக்கிடையில் யாசம் பெற்று வருவதாகவும் அவர் நாள் ஒன்றுக்கு சுமார் 4000 ரூபாயும் மாதத்திற்கு 150,000 ரூபாய் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இவர் யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், அவரது மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று அவரை கைது செய்த நிலையில் அவரது மகள்களில் ஒருவர் வந்து அவரை பார்த்துச் சென்றதாக அவரை கைது செய்துள்ள பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.