மகராஷ்ட்ராவில் அணையொன்று உடைந்து விழுந்ததில் 6 பேர் பலி: 20 பேர் மாயம்

Published By: Digital Desk 3

03 Jul, 2019 | 12:34 PM
image

இந்தியாவில் மகராஷ்ட்ரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் கொட்டி தீர்த்து வருவதால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளும், வீதிகளும் தெரியாத அளவுக்கு வெள்ளக்காடாக மாறி உள்ளன. வீதி, ரயில், விமான போக்குவரத்தும் முடங்கி காணப்படுகின்றது.

பெய்துவரும் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதில் மும்மையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 78 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.

இந்நிலையில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை உடைந்துள்ளது. இதனால், அருகில் உள்ள ஏழு கிராமங்கள்  வெள்ளத்தில் மிதக்கின்றன. 12 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளதோடு, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெள்ளநீரில் 20 பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியில்  மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

1974-ம் ஆண்டு மும்பையில் இதேபோன்ற பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஒரே நாளில் 375.2 மி.மீ. மழை பெய்தது. 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே மழை அளவு பதிவாகி உள்ளது.

அதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 375.2 மி.மீ. பதிவாகி வரலாறு காணாத மழை பெய்து உள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான...

2026-07-17 22:32:10
news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12