இந்­திய அணி வீழ்த்த முடி­யாத அணி அல்ல. ஐ.சி.சி. தொடர்களில் ஏற்­கனவே நாம் இந்­தி­யாவை வீழ்த்­தி­யுள்ளோம் என்­பதால் உலகக் கிண்­ணத்­திலும் வீழ்த்­துவோம் என்று இலங்கை அணியின் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான தனஞ்­சய டி சில்வா தெரி­வித்­துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரில் 8 போட்­டி­களில் விளை­யாடி 3இல் வெற்­றியும் 3 தோல்­வியும் அடைந்த இலங்கை அணி 6ஆவது இடத்தில் இருக்­கி­றது. இலங்கை அணியால் இந்­திய அணி­யை­வென்றால்கூட உலகக் கிண்­ணத்தின் அரை­யி­று­திக்கு தகு­தி­பெற முடி­யாத நிலையில் உள்­ளது. 

இந்­நி­லையில் எதி­ர்வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள கடைசி லீக் போட்­டியில் இலங்கை அணி இந்­தி­யாவை எதிர்த்­தா­டு­கின்­றது.

நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான போட்­டியில் இலங்கை அணி 23 ஓட்­டங்­களால் வென்று நம்­பிக்­கை­யுடன் இருக்­கி­றது. நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இங்­கி­லாந்து, மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் அணி­களை இலங்கை அணி வீழ்த்­தி­யுள்­ளது. 

அதேபோல் ஒருநாள் தொட­ரில் இந்­திய அணிக்கு எதி­ராக 8 போட்­டி­களில் இலங்கை அணி விளை­யா­டி­யுள்­ளது. இதில் ஒரு போட்­டியில் மாத்­தி­ரமே இலங்கை அணி வென்­றுள்­ளது.

2017ஆம் ஆண்டு நடை­பெற்ற சம்­பியன் கிண்ணத் தொடரில் இந்­திய அணியை 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் இலங்கை அணி வென்­றி­ருந்­தது. இதே­போன்ற முடிவை இந்தப் போட்­டி­யிலும் இலங்கை அணி பெறும் என்று தனஞ்­சய தெரி­வித்­துள்ளார். 

இது குறித்து அவர் கருத்து வெளியி­டு­கையில், இந்­திய அணி ஒன்றும் வீழ்த்த முடி­யாத அணி அல்ல. மேற்­கிந்­தியத் தீவு­களை வீழ்த்தி அதி­க­மான நம்­பிக்­கை­யுடன் இருக்­கிறோம். இந்­தி­யா­வுக்கு எதி­ரான கடைசிப் போட்­டியில் வென்று போட்­டியை உயர்ந்த இடத்தில் முடிப்போம்.

ஒவ்­வொரு போட்­டி­யையும்வெல்­வ­தற்­கா­கவே விளையாடு கின்றோம். இந்திய அணியை நாங்கள் தோற்கடித்தால் உலகக் கிண்ணத் தொடரில் 5 ஆவது இடத்திற்கு உயர்வோம் என்று தெரிவித்துள்ளார்.