அனுமதிப்பத்திரமற்ற பஸ்களுக்கு 5 இலட்சம் ரூபா தண்டம் 

Published By: Digital Desk 4

02 Jul, 2019 | 10:36 PM
image

அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு ஆணைக்குழுவினால் 5 இலட்சம் ரூபா வரையில் தண்டப்பணம் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தேசிய போக்குவரத்து சபைத் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாணங்களில் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி 200 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன. இது மேலும் அதிகரிக்கப்படும். இந்த அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுவதனால் அனுமதிப்பத்திரத்துடன் சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கிப்படுகின்றது. இவர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தியே சேவையில் ஈடுபடுகின்றன. 

இருப்பினும் வீதியில் அனுமதிப்பத்திரம் இன்றி பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவோர் குறிப்பிட்ட நேரங்களின்றி சேவையில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நடத்துநர்கள் உள்ளிட்டோர் மத்தியில் மோதல்கள் இடம்பெறுகின்றன. 

விசேடமாக இவ்வாறு பெரும் எண்ணிக்கையான பஸ்கள் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கிடையே சேவைகளில் ஈடுபடுகின்றன. குறிப்பாக இந்த பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிலையங்களுக்குள் உள்வாங்கப்படுவதில்லை. 

குறிப்பாக வெள்ளவத்தை, மருதானை, தெஹிவளை, கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களிலிருந்து பஸ் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். இது பாரிய அநீதியாகும். 

இதன் காரணமாக 250,000 ரூபாவாக உள்ள தண்டப்பணத்தை 500,000 ரூபாவாக அதிகரிப்பது காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும் என தேசிய போக்குவரத்து சபைத் தலைவர் ஜனக மல்லிமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03
news-image

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக...

2026-04-12 15:40:52