(ப.பன்னீர்செல்வம்)

கொழும்பு மாநாகரில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதோடு, எலிக்காய்ச்சல் நோய் தொற்றும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென கொழும்பு மாநாகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜித் விஜேமுனி தெரிவித்தார். 

எலிகளை அழிப்பதற்காக மருந்துகளை வழங்குவதற்கு விசேட பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 2503550 இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு எலிகளை அழிப்பதற்கான மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இது தெடார்பில் அவர் மேலும் கூறுகையில்,

 

கொழும்பு நகரில் எலிகள் அதிகரித்துள்ளன. இதனால் பல்வேறு நோய்களும், எலிக்காய்ச்சல் தொற்றும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். 

2014 ஆம் ஆண்டு 14 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு 15 பேர் பாதிக்கப்பட்டனர். 2016 இவ் ஆண்டின் முதல் இரு மாதங்களில் எலிக்காய்ச்சலினால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

எனவே கொழும்பு மாநகர சபை எலிகளை அழிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. எலிகளை அழிப்பதற்கான மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவின் ஊடாக வீடு வீடாக எலிகளை அழிக்கும் மருந்துகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

இம் மருந்து தேவைப்படுவோர் 2503550 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் டாக்டர் விஜேமுனி தெரிவித்தார்.