பிரபல நடிகர் கணேஷ், தொகுப்பாளினியும் நடிகையுமான நிஷாவை  காதலித்து, கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி  திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் பலரையும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டார். 

இந்நிலையில், நடிகர் கணேஷின் மனைவி நிஷாவின் பிறந்தநாளுக்கு மறுநாள் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை கையை இறுகப் பிடித்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு கணேஷ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும், தற்போது மனைவி, குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தவுடன் கணேஷ் வெங்கட்ராமன் மனைவியுடன் சேர்ந்து சுற்றுலா சென்று வருவது அவருடன் நேரம் செலவிடுவது என்று இருந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.