ஆண் களை அச்சுறுத்தும் ஹீமோபீலியா.!

Published By: Robert

04 May, 2016 | 10:36 AM
image

மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரண மாக மனித உடலில் ஏற்படும் கடுமையான நோய்களில் ஒன்றாக ஹீமோபீலியா உருவெ டுத்துள்ளது. அத்துடன் இந் நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்நோய் தாக்கியவர்கள் பெரும்பாலும் மரணமடைவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

மரபணுக்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாகத்தான் ஹீமோபீலியா நோய் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் ஆண் களையே தாக்குகிறது. ஏனெனில் ஆண்களின் உடலில் எக்ஸ் மற்றும் வை குரோமோசோம்களும், பெண்களுக்கு எக்ஸ் மற்றும் எக்ஸ் குரோமோசோம்களும் உள்ளன. இதில் ஆண்களிடத்தில் உள்ள எக்ஸ் குரோமோசோம்களில் ஒன்றில் சிறிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர் களுக்கு இந்நோய் தாக்கக்கூடும்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கினால், அவை உறையாமல் தொடர்ச்சியாக கசிந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக மூட்டு பகுதி களில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கினால், உறையாமல் தொடர்ந்து வழிந்து கொண்டேயிருக்கும். அத்துடன் காலில் பெரிய வீக்கத்தையும் உண்டாக்கிவிடும். இது தான் இந்நோயின் அறிகுறி. அதே போல் உடலின் ஏனைய பகுதிகளில் இரத்தக்கசிவு இருந்தாலும் சிகிச்சையளித்து காப்பாற்றி விட இயலும். ஆனால் மூளை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உள்பக்கத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டால் அவர்களுக்கு மரணம் ஏறக்குறைய உறுதி யாகிவிடும். இந்நோய் ஏற்படுவதற்கு பெற்றோர்களுக்கு முக்கிய பங்குண்டு. அதிலும் ஆண்களுக்கு மட்டுமே இதில் பெரும் பங்கிருக்கிறது. ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு இருந்தாலும், குழந்தை பெற்றுக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை ஆண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட பெண்களும் காரண மாகிவிடுகிறார்கள்.

இவர்களுக்கான சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஊசி மருந்து விலை கூடியதாக இருக்கிறது. ஆனால் தற்போது பிளாஸ்மாவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கிரியோபிரசிபிடேட்டை ஊசி மூலம் செலுத்தி சிகிச்சை அளிக்கிறார்கள்.

அத்துடன் இந்த நோயை நிரந்தரமாக குணப்படுத்த இயலாது. இரத்தக்கசிவு ஏற்படும் போதெல்லாம் தேவையான அளவிற்கு இவ்வகையான ஊசிகளின் மூலம் தான் நிவாரணம் பெற்று உயிர் வாழ இயலும். இத்தகைய சிகிச்சைகளைப் பெறாமல் விடு­வது பெரிய ஆபத்தை தோற்றுவிக்கும்.

டாக்டர். அருணா

தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயஸ்தீனியா கிராவிஸ் எனும் ஒட்டோ இம்யூன்...

2024-02-27 15:19:13
news-image

இணைப்பு திசுக்களில் ஏற்படும் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-26 17:08:02
news-image

சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-02-22 17:04:44
news-image

டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பிற்குரிய...

2024-02-20 16:54:31
news-image

தீவிர ஒவ்வாமை பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

2024-02-19 18:58:31
news-image

மென்திசு சர்கோமா புற்றுநோய் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-17 17:36:29
news-image

பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனும் கல்லீரல்...

2024-02-17 16:39:47
news-image

செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு...

2024-02-16 20:22:59
news-image

தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

2024-02-14 16:15:29
news-image

லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய...

2024-02-13 16:55:56
news-image

புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை...

2024-02-12 16:40:05
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டிகளுக்கு நிவாரணமளிக்கும் சிகிச்சை

2024-02-09 16:49:44