விவசாய நிலத்தில் விழுந்த போர் விமானத்தின் ஒரு பகுதி

Published By: Digital Desk 3

02 Jul, 2019 | 12:11 PM
image

இந்தியாவில் கோவை அருகே விவசாய நிலத்தில் போர் விமானத்தின் ஒரு பகுதி விழுந்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான படைத்தளம் அமைந்தள்ளது. அங்கிருந்து தினசரி போர் விமானங்கள் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குப் பயிற்சிக்குச் சென்று வருவது வழக்கம். அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக் - 21 ரக போர் விமானம் பயிற்சிக்குப் புறப்பட்டது.

அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விமானப்படை வீரர்கள் இருந்தனர். இந்த விமானம் சூலூர் அருகே கடந்து செல்லும் போது, அதில் கூடுதலாக இணைக்கப்பட்டிருந்த 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிவாயு கொள்கலன்,  விவசாய நிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 8.30 மணிக்கு விழுந்தது.

விழுந்த வேகத்தில் அது வெடித்து, துண்டு துண்டாகச் சிதறியது. அச்சமயம் அங்கு யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படவில்லை. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது ஏதோ ஒரு பொருள் விழுந்து கிடப்பதைக் கண்டு சூலூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் இது குறித்து தகவல் அறிந்த விமானப் படைத்தள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து துண்டு துண்டாக நொறுங்கிய எரிவாயு கொள்கலனை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த எரிவாயு கொள்கலன் வெறுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே சமயம், கூடுதலாக இணைக்கப்பட்டிருந்த இந்த எரிவாயு கொள்கலன் பயிற்சியின் போது விமானத்தில் சென்றவர்களே கழட்டி விட்டார்களா அல்லது தவறி விழுந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47