(எம். எப். எம். பஸீர்)

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் சந்தேக நபர்களாக பெயரிட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை பதில் பொலிஸ்மா அதிபர் இதுவரையில் செயற்படுத்தவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி இதற்கான ஆலோசனையை பதில் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளார். 

இந் நிலையில் அது தொடர்பில் இன்று வரை செயற்படாமைக்கான காரணத்தை எழுத்து மூலம் அறிவிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்தாக சட்டமா அதிபரின் செய்தி தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.