மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குறைந்த வயதில் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் விரைவாக சதத்தை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுள்ளார்.

அத்துடன் இந்த சதம் இவரது கன்னி சதமாகும்.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் குறைந்த வயதில் விரைவாக சதம் பெற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில்  அயர்லாந்து அணியின் போல் ஸ்டெர்லிங் முதல் இடத்திலும் (20 வயது, 196 நாள்), ரிக்கி பொண்டிங் இரண்டாவது இடத்திலும் (21 வயது, 76 நாள்), அவிஷ்க பெர்னாண்டோ மூன்றாவது இடத்திலும் (21 வயது, 87 நாள்), விராட் கோலி நான்காவது இடத்திலும், (22 வயது, 106 நாள்), சச்சின் டெண்டுல்கர் ஐந்தாவது இடத்திலும் (22 வயது, 300 நாள்) உள்ளளனர்.

அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுக் கொண்ட இந்த சதமே நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட முதல் சதம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அணி சார்பில் 8 சதங்கள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.