தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான சகாதேவனின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் எனக் கோரியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்கக் கோரியும்   யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ், மாநகர சபை உறுப்பினர்கள், பொதும்மக்கள் உடப்படப் பலரும் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசியல் கைதி சகாதேவனின் மரணம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் அரசு மேற்கொண்ட கொலையே, சிறைச்சாலையா கொலைக்களமா? பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கு, 

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் ஆகிய கோரிக்கைகள் எழுதப்பட்ட பாதாதைகளை தாங்கியவாறும், கோஸங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.