(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கட்சி பேதமின்றி ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு யார் அல்லது எந்த கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தாலும் எவ்வித கட்சி பாகுபாடுமின்றி நாம் அதற்கு ஆதரவு வழங்குவோம். 

எதிர்கட்சி என்ற ரீதியில் எமது வாக்கினை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகப் பயன்படுத்துவோம். எமக்குள் கட்சி ரீதியாக கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள் காணப்பட்டாலும் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.