(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதைப் போன்று பாடப்புத்தகங்களில் புகைப்படத்துடன் செய்தி பிரசுரிக்கப்படுகின்றமையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 

இதன் போது கடந்த காலங்களில் அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்களிலும் கல்வி அமைச்சரின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகிருந்தமை தொடர்பில் விளமளிக்கப்பட்டதோடு, அவ்வாறு அச்சிடப்பட்ட பல புத்தங்களையும் இங்கு ஆதரமாக வழங்கியுள்ளேன். 

எனவே இதனால் இதற்கு முன்னரோ அல்லது எதிர்காலத்திலோ அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்பதே எனது நிலைப்பாடு. எனினும் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கேற்ப முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சரின் செய்தியில் அவரது புகைப்படத்தை உள்ளடக்கியுள்ளமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கல்வி அமைச்சர் முன்னிலையாகியிருந்தார். 

விசாரணை ஆணைக்குழுவில்  வாக்குமூலமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.