(நா.தனுஜா)

சீன சிகரெட்டுக்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டால் தாம் இராஜினாமா செய்வோம் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, சீன சிகரட் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டால் இராஜினாமா செய்வதாக எச்சரித்து புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்திய கலாநிதி பாலிய அபேகோன் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இது தொடர்பான கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.