பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட கைக­லப்புத் தொடர்பில் இன்று நண்­பகல் 12 மணிக்கு முன்­ன­தாக விசா­ரணை அறிக்கை சபா­நா­யகர் கரு ஜயசூ­ரி­ய­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாக பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தி­யி­லுள்ள பிரதி சபா­நா­யகர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சபைக்குள் இரத்தம் சிந்தும் வகையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நடந்­து­கொண்­டமை குறித்து கவ­லை­ய­டை­கின்றேன். உறுப்­பி­னர்­களின் நட­வ­டிக்­கை­களை கண்­டிக்­கின்றேன். மக்­களின் நலன்கள் தொடர்பில் தீர்­மானம் எடுக்கும் கௌரவம் மிக்­கதும் அபி­மா­ன­மு­டை­ய­துமான நிறு­வ­னத்தில் இவ்­வா­றான சம்­பவம் இடம்­பெற்­றி­ருப்­பது கவ­லை­ய­ளிக்­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தின் நிலை­யி­யற்­கட்­டளைச் சட்­டங்­களை மீறி பல உறுப்­பி­னர்கள் நடந்­துள்­ளனர். குழப்பம் நடை­பெற்ற சம­யத்தில் பதி­வான ஒலி மற்றும் வீடியோ பதி­வுகள், படைக்­கல சேவி­தர்­களின் சாட்­சி­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நானும், குழுக்­களின் பிரதித் தலை­வரும், விசா­ர­ணை­களை நடத்­த­வுள்ளோம். இந்த விசா­ரணை அறிக்கை இன்று நண்­பகல் 12 மணிக்கு முன்னர் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­படும். இன்­றை­ய­தினம் விசேட கட்சித் தலை­வர்கள் கூட்டம் கூட்­டப்­பட்டு அதிலும் இது பற்றி ஆரா­யப்­படும் என்றார்.

பாரா­ளு­மன்­றத்தில் முறை­யாக நடந்­து­கொள்­ளாத உறுப்­பி­னர்கள் பற்றி சம்­பந்­தப்­பட்ட கட்­சி­களின் தலை­வர்கள் முடி­வெ­டுக்க வேண்டும். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஒழுக்கக் கோவை­யொன்றை தயா­ரிக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்கும் சூழ்­நி­லையில் இவ்­வா­றான மோதல் சம்­ப­வ­மொன்று சபைக்குள் இடம்­பெற்­றுள்­ளது. காய­ம­டைந்த உறுப்­பினர் ஒருவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன், சம்பவத்துடன் தொடர்­பு­பட்ட மேலும் சிலருக்கும் காயங் கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி

மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலை வருமான செல்வம் அடைக்கலநாதனும் பங்கேற்றிருந்தார்.