அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து  சுற்றுலா  வந்த நபரொருவர் திருகோணமலை-நிலாவெளி பகுதியில் நேற்றிரவு (30) உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவெளி கடற்கரையில்  கணவன், மனைவி ஆகியோர் நடமாடிக் கொண்டிருந்த வேளை நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் இதனையடுத்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் மனைவி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அவுஸ்திரேலியா - தஸ்மினியா நகரைச் சேர்ந்த ரொடோல் யோன் லெஸ்மன் (67வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை அவுஸ்திரேலியா நாட்டுக்கு கொண்டு செல்ல தூதரகத்தின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், திடீர் மரணம் தொடர்பில் தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் மனைவி தெரிவித்தார்.