பிரான்ஸைச் சேர்ந்த பிராங்கி ஸபதா (37 வயது) என்ற நபர் 'பளைபோர்ட் எயார்' என்ற பறக்கும் உபகரணத்தில் 50 மீற்றர் வரையான உயரத்தில் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் 2,252 மீற்றர் தூரம் பயணித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த உலக சாதனை குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

அவர் பிரான்ஸின் அத்திலாந்திக் கடற்கரை நகரான சோஸெட் – லெஸ்– பின்ஸில் சுமார் 7 நிமிடங்கள் பறந்து இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.