சுற்றுலா சென்று கிரிந்த கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரு பிள்ளைகள் உயிரிழந்த  நிலையில் குறித்த பிள்ளைகளின் தாய் பாதிக்கப்பட்டு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு (29) உயிரிழந்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி ஹட்டன் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகள் கிரிந்த கடற்பரப்பில் நீராடச் சென்ற போது, குறித்த தாயின் இரு பிள்ளைகளும் அவரது கணவரும் அலையில் சிக்கி உயிரிழந்தனர். 

இந்நிலையில் அவர்களில் குறித்த பெண்  காப்பாற்றப்பட்டு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.