கல்பிட்டி, நுரைச்சோலை மற்றும் ஆராச்சிகட்டுவ கடற்கரை பகுதிகளிலிருந்து இனந்தெரியாத இருவருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் வெளிநாட்டவர்களுடைய சடலங்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சடலங்கள் 7 நாட்களுக்கு முன் கரையொதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை மற்றும் ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.