சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தீவகம், நெடுந்தீவு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் சிவகங்கை மாவட்ட்ங்கழளைச்  சேர்ந்த 44 வயது முதல் 54 வயது மதிக்கத்தக்கவர்கள் என யாழ் நீரியல் வள திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த நால்வரையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.