பாலியல் வன்முறையை எதிர்த்த இரு பெண்களின் தலையை மொட்டையடித்த சம்பவத்தில் தொடர்புபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பீகாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டிலிருந்த தாயையும் மகளையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயன்றுள்ளனர்.

இரு பெண்களும் அதனை எதிர்த்தவேளை குறிப்பிட்ட கும்பலை சேர்ந்தவர்கள் பெண்களை தாக்கியதுடன்  அவர்களை மொட்டையடித்து பழிவாங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இருவரை கைதுசெய்துள்ளதாகவும் மேலும் சிலரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எங்களை மிக மோசமாக தடிகளால் தாக்கினார்கள் எங்கள் உடல்களில் காயங்கள் உள்ளன என பாதிக்கப்பட்ட தாயும் மகளும் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தவர்கள் முன்னிலையிலேயே தங்கள் தலை மொட்டையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் இவ்வாறான சம்பவம் இடம்பெறுவது இதுவே முதற்தடவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்பிரல் மாதம் பாலியல்வன்முறையை எதிர்த்த யுவதியொருவர் அசிட் தாக்குதலிற்கு உள்ளானார்.