(இராஜதுரை ஹஷான்)

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மரண தண்டனையினை தொடர்ந்து நிறைவேற்றாமல் இருப்போம் என வாக்களித்த 120 நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாகும். இவ்விடயத்தில் இருந்து ஒருபோதும் விடுப்பட முடியாது. நன்மை பயக்கும் என்று கருதி ஜனாதிபதி முன்னெடுக்கும் தீர்மானங்கள் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அடிப்படைவாதிகளின் குண்டு தாக்குதலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி இனங்களுக்கிடையில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தி அதனூடாக மீண்டும் ஆட்சிக்கு வரும் திட்டங்களையே வகுக்கின்றது. கறுப்பு ஜுலை இன கலவரத்தை ஐக்கிய தேசிய கட்சியே ஆரம்பித்தது.

இதன் காரணமாகவே 30 வருட கால சிவில் யுத்தம் தோற்றம் பெற்றது. இதன் தொடர்ச்சியினை மீண்டும் முன்னெடுக்கும் முயற்சியே தற்போது இடம் பெறுகின்றது.

உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தை கொண்டே இவர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார். மரண தண்டனையினை நிறைவேற்றுவது ஒருபோதும் சாத்தியப்படாது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மரண தண்டனையினை தொடர்ந்து நிறைவேற்றாமல் இருப்போம் என வாக்களித்த 120 நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாகும். இவ்விடயத்தில் இருந்து ஒருபோதும் விடுப்பட முடியாது. நன்மை பயக்கும் என்று கருதி ஜனாதிபதி முன்னெடுக்கும் தீர்மானங்கள் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.