கிளிநொச்சி உதயநகர் மேற்கிலுள்ள 30 வீட்டுத்திட்டத்தில் வசித்த  இளைஞர் ஒருவர்   சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சிவலிங்கம் சிவச்செல்வன் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். 

மரணவிசாரணையை மரணவிசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி மேற்கொண்டார்.

கடந்த யுத்தத்தின்போது குறித்த நபருக்கு மனநோய் ஏற்பட்டது எனவும் அதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர்  தற்கொலை செய்துகொண்டுள்ளார் என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.