போதைவஸ்து துஷ்பிரயோகம் எச்.ஐ.வி./ எயிட்ஸ் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, சமுதாயத்திற்கு அறிவூட்டுதலின் அவசியத்தை உணர்ந்து சர்வதேச சிங்க சமாஜம் - பிராந்தியம் 306A2,  தெஹிவளை வடக்கு சிங்க சமாஜத்தினூடாக 1993/94ல் ஆரம்பித்த தொடர் நிகழ்ச்சிகள் தென் இலங்கையின் சகல பகுதிகளிலும் இன்று வரை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றது.

காலத்தின் அவசியத்தை அறிந்து 2016 ஆம் ஆண்டு சர்வதேச ரோட்டரி கழகம் - பிராந்தியம் 3220 கொழும்பு மிட்சிற்றி ரோட்டரி கழகம் ஊடாக சிங்க சமாஜத்துடன் இணைந்து வடகிழக்கு மாகாணங்களில் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றனர்.

இத்தொடரில் 15 ஆவது நிகழ்ச்சி ஜுன் 13 ஆம் திகதி மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்திலும், 16 ஆவது  நிகழ்ச்சி மானிப்பாய் இந்து கல்லூரி மண்டபத்திலும் அவ்வப் பிராந்தியங்களிலுள்ள பாடசாலைகளிலிருந்து வருகை தந்த க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக நடைபெற்றது.

அத்தோடு “ போதைவஸ்து துஷ்பிரயோகமும் அதன் பாதிப்புக்களும் ” என்ற தலைப்பில் சித்திரப்போட்டி இடம்பெற்று பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளுக்கான அனுசரணையை Rotary Australia World Community Service,Australian Medecal Aid Foundation, Rotary Club of Hills - Kellyville தொடர்ந்தும் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையின் MMGBM ரசாட், ADIC  நிறுவனத்தின் ஏ.கோடீஸ்வரன், வைத்திய காலநிதி எஸ்.முருகானந்தன், ஓய்வு நிலை சுங்கப் பணியாளர் (போதைவஸ்து தடுப்பு பிரிவு) எஸ்.இராமசந்திரன் ஆகியோர் செயலமர்வுகளை திறம்பட நடத்தினர்.

இணைத்தலைவர்களான லயன்.எஸ்.இராமசந்திரன், ரோட்டேரியன் கே.அரபிந்தன், நிகழ்ச்சி ஏற்பாடுகள் சகலத்தையும் பொறுப்பேற்று நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் நடைப்பெற்ற 15 வது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்குபற்றியோரில் ஒரு பகுதியினர்

சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி ஒருவருக்கு லயன் எஸ்.இராமசந்திரன் பணப்பரிசை வழங்குகின்றார்

மானிப்பாயில் நடைப்பெற்ற 16வது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்குபற்றியோரில் ஒரு பகுதியினர்

சித்திரப்போட்டியில் பரிசுபெற்ற மாணவர்கள் ஐவருடன் முன் வரிலையில் ஏ.கோடிஸ்வரன் (ADIC) எஸ்.இந்திரக்குமார் (அதிபர் மானிப்பாய் இந்து கல்லூரி) இணைத்தலைவர்கள் லயன்.எஸ். இராமச்சந்திரன் Rtn கே.அரபிந்தன், Dr.S.முருகானந்தன், MMGBM ரசாட் (NDDCP) அமர்ந்துள்ளனர்.