மரணதண்டனை மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது : பிமல் ரத்நாயக்க 

Published By: R. Kalaichelvan

28 Jun, 2019 | 05:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மரண தண்டனை நிறைவேற்றுவதன் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது.கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

அவரசரகால சட்டம் பயங்கரவாத தாக்குதலைவிட பயங்கரமானதாகும்.அதனால் இச் சட்டத்தை பயங்கரவாதத்துக்கு மாத்திரம் பாவிக்கவேண்டும். மாறாக தொழிற்சங்களை அடக்க பாவிக்கக்கூடாது. தற்போது ரயில் ஊழியர்களின் போராட்டம் இடம்பெறுகின்றது. அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

அத்துடன் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். மணர தண்டனை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோது இணக்கம் தெரிவிக்க மாட்டாடோம்.

 1976க்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.இதுபோன்ற தண்டனைகள் ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் அரபு நாடுகளில் வழங்கப்படுகின்றன.ஆனால் அந்த நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை.

அதனால் மரண தண்டனையை நிறைவேற்றி ஜனாதிபதியும் ஷரிஆ சட்டத்தையே அமுல்படுத்த முயற்சிக்கின்றார். 

இவ்வாறான சட்டங்களை நிறைவேற்றும் உலகில் எந்த நாட்டிலும் குற்றங்கள் குறைந்ததில்லை. அதனால் மரண தண்டனை நிறைவேற்றுவதால் எமது நாட்டில் போதைப்பொருள் விற்பனை குறைவடையும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19