‘பக்ரீத்’

Published By: Daya

28 Jun, 2019 | 02:19 PM
image

இயக்குநர் ஜெகதீசன் சுபு ஒட்டகத்தை மையமாக வைத்து ‘பக்ரீத்’ என்ற பெயரில் படம் இயக்கி யிருக்கிறார். இதில் விக்ராந்த், வசுந்தரா, பேபி ஸ்ருத்திகா, எம். எஸ். பாஸ்கர்,  ரோஹித் பதாக், மோஹ்லீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ரூபன் தொகுத்திருக்கிறார். எம் 10 என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக எம். எஸ். முருகராஜ் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில்,

“ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் நடக்கும் ஒட்டக சந்தைக்கு ஒரு முறை சென்றிருந்தேன். அங்கு தோன்றிய ஒரு சிறு பொறிதான் ‘பக்ரீத்’ படத்தின் கதைக்கரு. தென் தமிழகக் கிராமத்திலிருந்து ஒரு விவசாயி, ஒட்டகம் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக அவர் ராஜஸ்தான் வந்து ஒட்டகத்தை வாங்கி செல்கிறார்.

அதன்பின் அவரால் அந்த ஒட்டகத்தை வளர்க்க முடிந்ததா? பராமரிக்க முடிந்ததா? தமிழகச் சூழலில் ஒட்டகத்தை வளர்க்க முடியாமல், அதனை திருப்பி அந்த சந்தைக்கே கொண்டு செல்வதற்காக அவர் பட்ட பாடு என்ன? என்பதை ஒரு கிராமத்து மண் சார்ந்த அழகியலோடு விவரிக்கும் திரைப்படம் தான் பக்ரீத்.

பக்ரீத் என்றவுடன் இது ஒரு மதம் சார்ந்த படமாகவோ, சமயம் சார்ந்த விடயமாக கருத வேண்டாம். அது ஒரு குறியீடு தான். இந்த படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் தான்.

ஏனெனில் ஒட்டகத்தின் கால்ஷீட் 100 நாட்கள் தான். அதற்குள் ஒட்டகத்துடன் நாயகனும் படக்குழுவினரும் பழக வேண்டும். ஒரு காட்சி கூட கிறாபிக்ஸ் காட்சிகள் இல்லாததால், ஒட்டகத்தை நடிக்க வைக்க வேண்டும். ஒட்டகத்தை அழைத்துக்கொண்டு நாயகன் தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பயணிக்கிறார்.

அந்த பயணத்தின் போது ஏற்படும் சமூக ,சமுதாய அரசியல் சூழலும் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் அம்சம். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் கதையுடனும், கதை போக்குடனும் பின்னிப் பிணைந்திருப்பதால், பாடல்கள் இல்லாமல் கதையை புரிந்து கொள்ள முடியாது.

அந்த வகையில் டி இமான் இசையில் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.” என்றார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. இவர் ஏற்கெனவே கதிர் நடிப்பில் வெளியான ‘சிகை ’என்ற சர்வதேச அளவில் விருதும் பாராட்டும் பெற்ற படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரின் கொடுமைகளை அழுத்தமாக விவரிக்கும் ஹிப்...

2024-09-12 16:44:48
news-image

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் 'நந்தன்'...

2024-09-12 16:50:19
news-image

மீண்டும் வடிவேலு - சுந்தர் சி...

2024-09-12 16:10:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின்...

2024-09-12 13:35:36
news-image

சாதனை படைத்து வரும் ஜூனியர் என்...

2024-09-11 16:37:14
news-image

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் மயக்கும்...

2024-09-11 16:35:24
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்'...

2024-09-10 15:37:43
news-image

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த 'நீயே வரமாய்...

2024-09-10 15:44:59
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' பட...

2024-09-09 17:23:38
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-09-09 16:15:08
news-image

கார்த்தி - அரவிந்த்சாமி கூட்டணி மாயஜாலம்...

2024-09-09 16:13:53
news-image

தயாரிப்பாளரான நடிகர் ராணா டகுபதி

2024-09-09 16:14:17