(இராஜதுரை ஹஷான்)

சுய நல அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தம் தடையாகக் காணப்படுகின்றது என்பற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவும்,  எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் இத்திருத்தத்தை  வெறுக்கின்றார்கள்.

தனிபட்ட தேவைகளுக்காக  ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ள   19வது திருத்தத்தை ஒருபோதும்   இரத்து செய்ய  இடமளிக்க முடியாது. அதற்கான அவசியமும்  ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு  அரசியலமைப்பின் 19வது திருத்தம்  பிரதான பங்கு  வகித்தது.  இத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள் ள விடயங்கள்   நாட்டின்  ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் என்று   மக்கள் எதிர்பார்த்தார்கள். 

அனைவரினதும் எதிர்பார்ப்பிற்கமைய   19வது திருத்தம் உருவாக்கப்பட்டது.  தற்போது    ஜனநாயகத்தை பாதுகாக்கும்  உயர் நிறுவனங்கள்   எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்படுவது  நாம பெற்றுக் கொண்ட பிரதான வெற்றியாகும்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை கொண்டு ஆட்சிக்கு வந்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இத்திருத்தம் நாட்டுக்கு ஒரு  சாபக்கேடு என  விமர்சனங்களை முன்வைப்பதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. 

இவரது தான்தோன்றித்தனமான  செயற்பாடுகளுக்கும்,  நிறைவேற்று அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுததியமைக்கும் 19வது திருத்தம் தகுந்த பாடத்தை கற்பித்தது. 

அரசியலமைப்பிற்கு முரனாக  உருவாக்கப்பட்ம 52 நாள் அரசாங்கத்தின் ஊடாக   நாட்டின் மீயுயர் அதிகாரம் கொண்ட நீதத்துறை  எந்த அளவிற்கு  சுயாதீனமாக செயற்படுகின்றது என்பதை   அனைவரும்  புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  நிறைவேற்று அதிகாரத்திற்கு  அரசியலமைப்பின் 19வது திருத்தம்  தடைகளை  ஏற்படுத்தியுள்ளது என்பது   ஏற்றுக் கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக செயற்படுவது  தடைப்பட்டுள்ளது.  உத்தேசிக்கப்பட்டுள்ள  ஜனாதிபதி தேர்தலில்  தான் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடமாட்டேன் என ஆரம்பத்தில் குறிப்பிட்ட சுதந்திர கட்சியின் தலைவர்  தற்போது   மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளார் என அவர் இதன் போது தெரிவித்தார்.