பிணைமுறி மோசடி ; அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

Published By: Vishnu

28 Jun, 2019 | 06:09 PM
image

பிணைமுறிகள் மோடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பேப்பர்ச்சுல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அலோஷியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சட்ட மா அதிபரினால் இன்றைய தினம் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேராவின் கையொப்பத்துடன் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா சாந்தனி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்திரன், பத்தினிகே சமரசிறி, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம், அர்ஜூன் ஜோசப் அலோசியஸ், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், டி.மித்ரா குணவர்தன, சி.ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன் மற்றும் ஆஜான் புஞ்சிஹேவா ஆகியோருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

இதனை அடுத்து  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள 10 பேரையும்  எதிர்வரும் ஜூலை 19 அம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

2026-08-15 15:19:13
news-image

“நீதியின் ஓலம்” போராட்டத்துக்கு அனுமதியளித்த வலி....

2026-08-15 15:30:06
news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49