ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சியை சேர்ந்த பெண் எம்.பி Oksana Bobrovskaya (30) மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் காருக்குள் வைத்து  உறவு கொண்டிருந்த போது குண்டு வெடித்து உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று, சைபீரியா மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்து இவரின் காரில் குண்டு வெடித்துள்ளது.

அதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அரை நிர்வாண நிலையில் எம்.பி மற்றும் அவரது கணவரின் உடல்களை காரின் பின்புற சீட் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

கணவரின் கையில் வெடிகுண்டு துண்டுகள் இருந்ததால், அவரே வெடிகுண்டுகளை பொருத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக இதுகுறித்து விசாரணை நடத்திய சைபீரிய பொலிஸ் தெரிவித்தனர்.

எம்.பியின் கணவர் ரஷ்ய இராணுவத்தில் சிறப்பு சேவை அதிகாரியாக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.