நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நோர்வூட் பிரதான வீதியில், மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று நோர்வூட் பாலத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இன்று பகல் 2.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்விபத்தில் 16 பேர் படுகாயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கூடுதலாக பாடசாலை மாணவர்களே காயங்களுக்குள்ளாகியிருப்பதாக பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது. 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.