புகையிரத தொழிற்சங்கத்திற்கு எதிராக இலங்கை ரயில்வே திணைக்களம் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. 

ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்திருக்கும் நிலையில் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் செய்துள்ளமைக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நிறுவனத்தின் பிரதானி என்றவகையின் தனக்குள்ள அதிகாரத்திற்கு அமைவாக 07 விடயங்களின் கீழ் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

வேலை நிறுத்தம் செய்துள்ள பணியாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.