அஞ்சலோ மத்தியுஸ் போன்ற மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாட தொடங்கும்போதே இலங்கை அணியின் வியூகங்களை செயற்படுத்த முடியும் என அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
மத்தியுஸ் இங்கிலாந்திற்கு எதிராக சிறப்பாக விளையாடியது ஏனைய வீரர்களின் விளையாட்டிலும் எதிரொலித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு உலகதரம் வாய்ந்த வீரர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அவர் கடும் அழுத்தங்களிற்கு உள்ளாகியிருந்த நிலையில் பெரும் மன உறுதியை வெளிப்படுத்தினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவதே சிறந்த அணிகளிற்கான அறிகுறி எனவும் குறிப்பிட்டுள்ள ஹத்ததுருசிங்க சிரேஸ்ட வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது அது ஏனையவீரர்களிற்கு நம்பிக்கையை அதிகரி;க்கின்றது என தெரிவித்துள்ளார்.
சிரேஸட் வீரர்கள் முக்கியமான தருணங்களில் பங்களிப்பு செய்கின்றனர் அவர்கள் போட்டியை தமது அணிக்கு சாதகமாக மாற்றுகின்றனர் எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய அணிகளில் ஜோ ரூட் வில்லியம்சன் போன்றவர்கள் உள்ளனர், இலங்கை அணியை பொறுத்தவரை சிரேஸ்ட வீரர்கள் சிறப்பாக விளையாடவேண்டியது அவசியம் ஏனெனில் எங்கள் வியூகங்கள் அவர்களை மையமாக கொண்டே அமைந்துள்ளன எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM