(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரிப்பது என்றால் தெரிவுக்குழு முன்னிலையில்  நான் வர முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார். 

இதற்கு பதில் தெரிவித்த சபை முதல்வர் கிரியெல்ல, நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு யாருக்கேனுமோ  பாராளுமன்-றத்திற்கு தடை போட முடியாது என்றார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரி-விக்கும் போதே தயாசிறி எம்.பி இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,  

பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

இதன் பின்னர் அதற்குள் தெரிவுக்குழு யோசனைக்கு திருத்தமொன்று உள்ளடக்கப்பட்டது. கையெழுத்திட்ட எம்.பி.க்களுக்கும் தெரியாமலே அது நடந்தது. தற்போது தெரிவுக்குழு தொடர்பாக பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. நீதிமன்றத்தினால் வழங்கக் கூடிய தீர்ப்பு தொடர்பான விடயங்களுடன் தொடர்புடைய விடயங்களை இங்கு கலந்துரையாட முடியாது.

தற்போது உயர் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் இது தொடர்பாக இடம்பெற்று வருகின்றன. சட்ட மா அதிபரினால் ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜுன் 4ஆம் திகதி அந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இந்த குழுவில் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. இதனால் உடனடியாக இந்த குழுவை கைவிட வேண்டும். 

நாளை (இன்று) எனக்கும் இந்த குழுவுக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது. நான் இந்த குழுவுக்கு செல்வதா இல்லையா என்று சிந்திக்க வேண்டும். நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் விடயமொன்று தொடர்பாக நான் எவ்வாறு தெரிவுக்குழுவில் கலந்-துரையாடுவது. எம்.பி.யாக இருந்துஆகொண்டு எனக்கு எவ்வாறு இதற்கு பதில் கூற முடியும். தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடத்தப்படவிருந்த குண்டு தாக்குதல் தொடர்பாக நான் வெளியிட்ட கருத்து தொடர்பாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்-ளது. எவ்வாறாயினும் தெரிவுக்குழுவை சட்டமா அதிபரின் அறிவித்தலுக்கமையவும்  நிலையியல் கட்டளைக்கமையவும் நடத்தி செல்ல முடிஆயாது.  இதனால் அதனை இரத்து செய்யுமாறு கேட்கின்றேன் என்றார். 

இதற்கு  பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்,  நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு யாருக்கேனுமோ  பாராளுமன்றத்திற்கு தடை போட முடிஆயாது. அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்த காலத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்திற்கோ வேறு யாருக்குமோ பாராளுமன்றத்திற்கு தடைபோட முடி-யாது. சட்டமா அதிபருக்கோ  உயர் நீதிஆமன்றத்திற்கோ அவ்வாறு செய்ய முடியாது. இதனை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.   மீண்டும் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற விடயத்தில் நீதிமன்றத்தினால் தடைபோட முடியாது என்ற விடயத்திற்கு நாங்களும் இணங்கு கின்றோம். ஆனால் நாங்களே அமைத்த பாராளுமன்ற நிலையியல் கட்டளையிலேயே  நீதிமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடவடிக்கையெடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளதே என்றார்.