இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருத்தரப்பு வர்த்தகத்தை விரிவாக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்தான உயர் மட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெற உள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சீனாவுடனான உறவில் ஏற்பட்டிருந்த விரிசல் சுமுகமான நிலையை அடைந்ததைத் தொடர்ந்து சீனாவின் முதலீடுகள் இலங்கையை நோக்கி மீண்டும் நகர ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது.

இரு நாட்டு வர்த்தக வரலாற்றில் கடந்த வருடம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்திருந்து. இது கடந்த 2014 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 3.58 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 17 சதவீத அதிகரிப்பாகும். 

அதேபோல் கடந்த வருடத்தில் 93 சதவீதத்திற்கு அதிகமான இறக்குமதி சீனாவில் இருந்த மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

(வினோத்)