கூகுள் வரைப்படத்தால் ஒரே இடத்தில் குவிந்த கார்கள்

Published By: Daya

28 Jun, 2019 | 10:18 AM
image

அமெரிக்காவில் கூகுள் வரைப்படம் காட்டிய குறுக்குப் பாதையில் சென்ற 100 கார்கள், ஒரே இடத்தில் தவறான வழியில் சிக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

முன்பெல்லாம் புதிதாக ஓரிடத்திற்கு சென்றால், கையில் துண்டுச் சீட்டுகள் வைத்துக் கொண்டு, எந்த இடத்திற்கு சென்றோமோ அங்கு இருப்பவரிடமோ, அல்லது அங்கு கடை வைத்திருப்பவரிடமோ சென்று, இந்த குறிப்பிட்ட இடம் எங்கு உள்ளது? என கேட்போம். 

 அந்த காலம் மாறிப்போய் இப்போது நாமே இடத்தை எளிதாக கண்டுப்பிடிக்கிறோம். இதற்கு காரணம் நம் கையில் உள்ள தொலைபேசி மற்றும் கூகுள் வரைப்படம் இந்த வசதி அனைத்து ஆண்டிரொய்ட் தொலைபேசிகளிலும்  உள்ளது. 

நாம் எங்கிருந்தாலும், எங்கு செல்ல வேண்டும் என்றாலும், வரைப்படம் காட்டும் பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டோம். அப்படி சென்றபோது அமெரிக்காவில் ஒரு எதிர்ப்பாராத சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வேர் சர்வதேச விமான நிலையம் செல்ல, வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு சிலர் கூகுள் வரைப்பட உதவியை நாடியுள்ளனர்.

அவர்களுக்கு கூகுள், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம் அடைய குறுக்குப் பாதையை காட்டியுள்ளது. குறைந்த நேரத்தில் செல்லும் என்பதால் 100 பேர் இதனை பின்தொடர்ந்து காரில் சென்றுள்ளனர்.

இந்த பாதை மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. இருப்பினும் சென்றுள்ளனர். ஒரு இடத்தில் 100 கார்களும் போக வழியின்றி சிக்கியுள்ளன. பின்னர்தான் தெரிந்தது தவறான பாதை என்று. 

இது குறித்து அங்கு வந்திருந்த மான்சிஸ் தெரிவிக்கையில், ‘கணவரை அழைக்க விமான நிலையம் செல்வதற்காக கூகுள் வரைப்படத்தில் குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய பாதையை தேடினேன். 

இந்த பாதையை தான் காட்டியது. இங்கு வந்து பார்த்தால் என்னைப்போல் 100 கார்கள் நிற்கின்றன. கடைசியாகதான் தெரிந்தது. தவறான பாதை என தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில்,

‘கூகுள் வரைப்படம் ஒரு வழியை தெரிவு செய்து காட்டும்போது, வீதியின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துதான் காட்டுவோம். சில நேரங்களில் இப்படி நடக்கிறது’ என தெரிவித்துள்ளார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26