டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளின்போது, மைதானங்களுக்கு பிளாஸ்டிக் போத்தல்கள் கொண்டு செல்வதை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.
சமீபத்திய போட்டிகளின்போது, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மைதானங்களுக்கு பிளாஸ்டிக் போத்தல்களில் எந்த திரவப்பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது என பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஜப்பானில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். மைதானங்களுக்கு பார்வையாளர்கள் பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை கொண்டு செல்வதை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.