பேசாலை  காட்டாஸ்பத்திரி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவினை நேற்று புதன் கிழமை(26) கடற்படையினர் மீட்டுள்ளனர்.

நேற்று  காலை காட்டாஸ்பத்திரி கடற்கரையில் கடற்படையினர் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த படகை சோதனையிட்டுள்ளனர்.

இன் போது குறித்த படகில் காணப்பட்ட பொதிகளை மீட்டு சோதனை செய்த போது குறித்த பொதியினுள் கேரள கஞ்சா காணப்பட்டுள்ளது.

9 பொதிகளில் 18 கிலோ 900 கிராம் நிறை கொண்ட கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பேசாலை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.