மன்னார் மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய  பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை பகல் (27)   ஊக்குவிப்பு தொகை மற்றும் பரிசிலிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் மன்னார் ஆஹாஸ் விடுதியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரம கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 9 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உற்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன் போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு ஊக்குவிப்பு தொகை மற்றும் பரிசிலிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.