முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை அகற்றியதன் மூலம் அவரின்  உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாக “ பவதி ஹன்ட ”  அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இது முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்யும் முயற்சிக்கு வழிகோலுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட “ பவதி ஹன்ட ”  அமைப்பின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.