இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவின் சுற்றுச் சூழல் அமைப்புக்கான உதவி பொதுச் செயலராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது, எரிக்சொல்ஹெய்ம் பாரிஸில் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வழங்கும் அமைப்பில் பணியாற்றி வருகின்றார்.

ஐநாவின் பொதுச் செயலர் பான்கிமூன் இது தொடர்பான அறிவிப்பை வெகு விரைவில் ஐநாவில் வெளியிடவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான 2002 ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைக்கு எரிக் சொல்ஹெய்ம் முக்கியமான பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.