(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அவசரகால சட்டத்தை நீடிப்பதன் மூலம் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி, சாதாரண விடயங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தி பிரிவினையை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடித்துக்கொள்ளும் விவாதம் தொடர்பிலான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.