யாழில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி இன்று பிற்பகல் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும்  கழுத்து, நெஞ்சு என 12 இடங்களில்  கத்திக்குத்து ஆழமாக பதிந்திருந்ததால் அவருக்கு அதிகளவு குருதி வெளியேறியுள்ளது. இதனால் அவர் உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாயார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.