(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படையினரால் கச்சதீவு கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட ரோந்து நடவடிக்கையின் போதே இவ் இந்திய மீனவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து சட்ட விரோத மீன் பிடிக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரும் 45 - 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் உதவி மீன்வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும், உள்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.