மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வெயிலுடன் கூடிய வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் படுவான்கரைப் பகுதியிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளன.

அப்பகுதியில் அமைந்துள்ள கோவில் போரதீவுக்குளம், பெரியபோரதீவு பெரியகுளம், வெல்லாவெளிகுளம், பழுகாமத்தில் அமைந்துள்ள குளங்கள் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் அமைந்துள்ள குளங்கள் அனைத்தும் முற்றாக வற்றியுள்ளன.

அத்துடன், குடிநீருக்கு பயன்படும் கிணறுகளும் வற்றிப்போட்டுள்ளதால் போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் பொதுமக்களுக்கு வவுச்சர்கள் மூலம் குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பெறுகாமம் எனும் இடத்தில் அமைந்துள்ள குளம் வற்றிவருகின்ற நிலையில் பாரம்பரிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு அக்குளத்திலுள்ள மீன்களை பிடித்துள்ளனர்.