இலங்கையில் ஏற்றுமதித்துறைக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் ப்ரென்டிக்ஸ் (Brandix) நிறுவனத்தின் மட்டக்களப்பு , ரபுக்கன ஆடைத் தொழில்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள அடுக்கு வடிவமைப்புத் திட்டங்கள் (Brandix) இரண்டின் கட்டமைப்பை யுனைட்டட் டிரெக்டர் என்ட் இக்குவிப்மன்ட்  (UTE) நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது.

இலங்கையில் வளர்ந்து வரும் தொழில்துறைகளின் களஞ்சிய தேவைகளுக்கு வெற்றிகரமான தீர்வாக இந்த பாரிய அடுக்கு வடிவமைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

(UTE) நிறுவனத்தினால் Brandix  நிறுவனத்தின் மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலைக்கான அடுக்கு வடிவமைப்புத் திட்டம் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. Brandix  நிறுவனத்தின் ரபுக்கன ஆடைத் தொழில்சாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்கு வடிவமைப்புத் திட்டம் விரைவில் பூர்த்தியாகவுள்ளது.

மட்டக்களப்பு Brandix  ஆடைத் தொழிற்சாலையில் நிறுவப்பட்ட அடுக்கு வடிவமைப்பு மற்றும் Truck செயல்திட்டத்தின் மொத்த பெறுமதி 51 மில்லியன் ரூபாவாகும். 

ரபுக்கன Brandix ஆடைத் தொழிற்சாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்கு வடிவமைப்பு மற்றும் Truck செயல்திட்டத்தின்

மொத்த பெறுமதி 50 மில்லியன் ரூபா என UTE நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

 இந்த அடுக்கு வடிவமைப்புத் செயல்திட்டத்திற்காக UTE நிறுவனம், உலகின் முதல்தர அடுக்கு வடிவமைப்புத் திட்டத்திற்கு சிறந்த தீர்வான மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Dexion வர்த்தக நாமத்துடனான பொருத்துகளைப் பயன்படுத்தியுள்ளது. 

8 தசாப்த கால அனுபவமும் செயல்திறனும் உறுதி Dexion இலாபகரமான உலகின் முதல்தர உற்பத்தியாகும்.

இந்த அடுக்கு வடிவமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மற்றும் ரபுக்கன Brandix ஆடைத் தொழிற்சாலைகளுக்கு UTE  நிறுவனத்தினால்  ஐக்கிய இராஜ்ஜியத்தின் வழிகாட்டல்களுக்கமைய Flexi AC சான்றிதழ் பெற்ற ட்ரெக் வண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. Flexi ACட்ரெக் வண்டிகள், செயல்திறன் பாதுகாப்பு ஆகியவற்றுடன் நம்பிக்கையை வென்றத் தெரிவாகும்.

 இந்த Flexi AC வண்டிகள் வணிக பொருட்களை களஞ்சியசாலைக்குள் காவிச் செல்வதற்கும்ரூபவ் களஞ்சியப்படுத்துவதற்கும் அதிகபட்ச செயல்திறனைக் கொண்டுள்ளது.