குருணாகல் வைத்தியரை பாது­காத்து  ஊட­க­வி­ய­லா­ளரை கைது செய்ய குற்றப் புல­னாய்வு பிரிவு முயற்சி - விமல்

Published By: Digital Desk 3

27 Jun, 2019 | 09:48 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிங்­கள தாய்­மா­ருக்கு கருத்­த­டை­செய்த வைத்­தி­யரை பாது­காக்­கவும் அது­தொ­டர்­பான தக­வல்­களை வெளி­யிட்ட ஊட­க­வி­ய­லா­ளரை கைது­செய்­யவும் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. அத்­துடன் வைத்­தி­ய­ருக்கு எதி­ராக வாக்­கு­மூலம் தெரி­விக்க  வரு­ப­வர்­களை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் அவர்­களின் வாக்­கு­மூ­லங்­களை மாற்றி தெரி­விக்­கு­மாறும் பலவந்­தப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதனை நிரூ­பிக்­கவும் தயா­ராக இருக்­கின்றேன் என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

தேசிய சுதந்­திர முன்­னணி கட்சிக் காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

வைத்­தியர் ஷாபி தொடர்­பான செய்­தியை வெளி­யிட்ட ஊட­க­வி­ய­லா­ளரை கைது­செய்­யவும் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட சிங்­கள தாய்­மா­ருக்கு கருத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்ட வைத்­தியர் குற்­ற­மற்­றவர் என தெரி­விக்­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யு­டனே இந்த நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அத்­துடன் கடந்த அர­சாங்க காலத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாதிக்­கப்­ப­டும்­போது அதற்கு எதி­ராக பல ஊடக அமைப்­புக்கள் வெளி­நாட்­டுப்­ப­ணத்­துக்கு போராட்­டங்­களை நடத்­தின. ஆனால் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக எழு­திய ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு ஆத­ர­வாக எந்த ஊடக அமைப்பும் இது­வரை குரல் கொடுக்­க­வில்லை.  அடிப்­ப­டை­வாதத்­துக்கு எதி­ராக எழு­து­வதை தடுக்­கவே குறித்த ஊட­க­வி­ய­லா­ளரை கைது­செய்ய குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு முயற்­சிக்­கின்­றது. அர­சாங்­கத்தின் ஆத­ர­வு­டனே அடிப்­ப­டை­வாதம் போஷிக்­கப்­ப­டு­கின்­றது.

 வைத்­தியர் ஷாபிக்கு எதி­ராக ஆயி­ரக்­க­ணக்­கான தாய்­மார்கள் முறைப்­பாடு செய்­தி­ருக்­கின்­றனர். இந்த முறைப்­பா­டுகள் தொடர்பில் சரி­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தில்லை. அதே­போன்று சொத்துக் குவிப்பு தொடர்­பாக கைது­செய்­யப்­பட்­டி­ருக்கும் வைத்­தி­ய­ருக்கு எதி­ராக வாக்­கு­மூலம் தெரி­விக்க  வரு­ப­வர்­களை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் அவர்­களின் வாக்­கு­மூ­லங்­களை மாற்றி தெரி­விக்­கு­மாறு பல­வந்­தப்­ப­டுத்­தி­யுள்­ளனர். குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு இதனை மறுக்­கு­மாயின் அதனை நிரூ­பிக்க தயா­ராக இருக்­கின்றேன்.

அதனால் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு ஆத­ர­வ­ளித்­து­வந்த ரிஷாத் பதி­யு­தீனை தூய்­மைப்­ப­டுத்தி அறிக்கை சமர்ப்­பித்­தி­ருக்கும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு, தற்­போது வைத்­தியர் ஷாபியும் குற்றமற்றவர் என தெரிவித்து விடுவிக்க நடவடிக்கை எடுத்துவருகின்றது. குற்றப்புலனாய்வு பிரிவை அரசாங்கம் இந்த நிலைக்கு ஆக்கியுள்ளது. அதனால் இவ்வாறு செயற்படும் குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து சாதாரண மக்களுக்கு நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் அடிப்படைவாதிகளை பாதுகாக்கும் இராஜ்ஜியமாக இந்த நாடு மாறியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48