கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த  இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்   விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன

கடுவலைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணொருவர் இரகசியமாக நடத்திவந்த தொலைத்தொடர்பு நிலையத்தை இன்று மாலை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்திலிருந்து இரண்டாயிரம் சிம் அட்டைகள் , கையடக்கத்தொலைபேசிகள் , கணினிகள் என்பனவற்றை மீட்டுள்ளனர்

இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய  மூன்று பேர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.