முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால்  போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டுள்ளன .

தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தினை முன்னிட்டு "போதையற்ற தேசம்" என்ற கருப்பொருளில் நாடுதழுவிய ரீதியில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில் இன்று  முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்கள் பலூன்களை வானில் பறக்கவிட்டு "போதையினை எதிர்க்கின்றேன்" என்ற விழிப்புணர்வினை மேற்கொண்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயல அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் ஒன்று கூடி போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பலூன்களை வானில்  பறக்கவிட்டு கவனயீர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இதனுடன் இராட்சத புகைக்கூடுகளும் வானில் பறக்கவிடப்பட்டுள்ளன.