மின்சார அலகொன்றின் விலை அதிகரிப்புக்கான  அரசாங்கத்தின் முயற்சி முறியடிக்கப்படும் - மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் 

Published By: R. Kalaichelvan

26 Jun, 2019 | 05:11 PM
image

(ஆர்.விதுஷா)

இலங்கை மின்சாரசபையின் பத்தாயிரம் கோடி ரூபா இழப்பை ஈடுசெய்வதற்காக மின்சார அலகு ஒன்றை 7 ரூபாவால் அதிகரிக்கும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் திட்டம் முறியடிக்கப்படும் என்று மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்தது. 

ஜனநாயக  முன்னணியின்  காரியாலயத்தில்  நேற்று  புதன்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பின்போது  கருத்து  தெரிவித்த மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர்  கே.எச். சஞ்சீவ  தம்மிக்க  கூறியதாவது  ,  

இலங்கை மின்சாரசபை பத்தாயிரம் கோடி ரூபா இழப்பை சந்தித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக மின்சார கட்டணத்தை ஒரு அலகுக்கு சுமார் ரூ 10 ரூபா வரை அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையே மின்சாரத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகிறது. 

2016 ஆம் ஆண்டிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்தமை காரணமாகவே மின்சாரசபை இந்த  இழப்பைச் சந்தித்துள்ளது. தனியார் துறையினரிடமிருந்து 40 ரூபா என்ற அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால் மின்சார சபைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமே. 

இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, மின்சாரம் வாங்கும்போது டெண்டர் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆனால்  முறைப்படி செயற்படாமல் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது. ஊழல் மோசடி தொடர்பாக நாம் வெளிப்படையாவே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறாக மின்சாரக்கட்டணத்தில்   அதிகரிப்பு  ஏற்படுமாயின்  மின்சார பாவனையாளர்கள்  பாரிய  நெருக்கடியை  சந்திக்க  நேரிடும்.  இது தொடர்பில்  மின்சார  பாவனையாளர்களை  தெளிவுபடுத்த வேண்டியமை  அவசியமாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  

இலங்கை  மின்சார சபை  100  மெகாவோல்ட்  மின்சாரப்பற்றாக்குறையை  சந்தித்துள்ளதாக  மின்வலுத்துறை  அமைச்சர்  ரவிகருணாநாயக்க  தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில்  , துருக்கிநாட்டு  கப்பலிலிருந்து  மின்சாரத்தை  கொள்வனவு  செய்யவதற்கான விலைமனுகோரப்பட்டதையடுத்து , தற்போது  200 மெகாவோல்ட்  மின்சார  தட்டுப்பாடு நிலவுவதாக  அறிவித்திருந்தார்.  பின்னர்  470 மெகாவோல்ட்  மின்சார  தட்டுப்பாடு நிலவுவதாக மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 100 மெகாவோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதியையே  வழங்கியுள்ளது.  இருப்பினும்  100 மெகாவோல்ட்டிற்கும்   அதிகமான  அளவு  மின்சாரத்தை கொள்வனவு  செய்வதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளனர் .  இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாக அலகிற்கு  7ரூபாவால்  மின்சார கட்டணம்  அதிகரிக்கும்  நிலை  ஏற்படும் . இவ்வகையான நடவடிக்கைகளையும்  மின்வலு  அமைச்சு  மேற்கொண்டு  வருகின்றது. 

2016 ஆம்  ஆண்டிலிருந்து  அதிக விலைக்கு  மின்சாரத்தை  கொள்வனவு  செய்தமையின் காரணமாகவே மின்சார சபைக்கு 10 ஆயிரம் கோடி  ரூபாய்  நட்டத்தை   சந்திக்க  வேண்டிய  நிலை  ஏற்பட்டுள்ளது. எவ்வாறெனில்  தனியார்  துறையினரிடத்திலிருந்து  40 ரூபாவிற்கு  அதிக  பெறுமதியில்  மின்சாரத்தை  கொள்வனவு  செய்துள்ளனர்.  இலங்கை  மின்சார  சட்டத்திற்கு  அமைய  ஒப்பந்த  முறையினூடாகவே  மின்சார  கொள்வனவுகளை  மேற்கொள்ள  முடியும்.  மாறாக  இந்த  ஒப்பந்தமுறைமையை  பின்பற்றாமல்  செயற்படுகின்றமையே   அதற்கு  காரணமாகும். இவ்வாறாக  மின்சார  சபையில் இடம் பெறும்  ஊழல் தொடர்பில்  இலஞ்ச  ஊழல்  ஆணைக்குழுவில்  முறைப்பாடு  செய்துள்ளோம்.  

மின்சார சட்டத்திற்கு  அமைய  மின்சாரத்தை  கொள்வனவு  செய்வதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம்  இலங்கை  பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழுவிற்கே  உள்ளது.  இந்த நிலையில்  2016 ஆம்  ஆண்டிலிருந்து  அதிக  விலையில்  கொள்வனவு செய்யப்பட  மின்சாரத்திற்கான  அனுமதியை  பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழு  வழங்கியிருக்கவில்லை. இருப்பினும்  ஆணைக்குழுவின்  அனுமதியின்றி  மின்சாரக்கொள்வனவுகள்  இடம் பெற்றுள்ளன என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32